இதோ Opera 12.10!

Opera உலாவியின் இந்த புதிய பதிப்பில், உங்கள் வலை அனுபவத்தை இன்னமும் வேகமாகவும், எளிதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தி செய்யப்பட்ட ஏராளமான மேம்பாடுகளின் பட்டியல் உள்ளது! இதோ சில சிறப்பு அம்சங்கள்:

SPDY பிணையத் தரநிலைக்கு ஆதரவைச் சேர்த்துள்ளோம், இது பக்க-ஏற்ற நேரங்களைக் குறைக்கும். Gmail, Twitter.com மற்றும் பிற பிரபலமான தளங்கள் முன்பே SPDY -ஐப் பயன்படுத்துகின்றன.

புதிய Opera மூலம், உங்கள் வாழ்வை எளிதாக்கும் இன்னும் பல நீட்டிப்புகளை நீங்கள் பயன்படுத்த முடியும். addons.opera.com -இல் வகை அல்லது பிரபலத்தின் அடிப்படையில் உலாவவும்.

இன்னும் பல இயக்க முறைமைகள் மற்றும் தளங்களில் Opera 12.10 சிறப்பாக பணிபுரிகிறது. Windows 8 Classic and Windows 7 ஆகியவற்றில் Opera -க்கு நாங்கள் அடிப்படை தொடுதல் ஆதரவைச் சேர்த்துள்ளோம், Mac பயனர்கள், OS X Mountain Lion -இன் புதிய திறன்களின் மேம்பாடுகளை Opera -இல் பயன்படுத்த முடியும், இதில் Mountain Lion -இன் கட்டமைந்த பகிர்தல் செயல்பாடும் அடங்கும்.

மேலும் அறிய விரும்புகிறீர்களா? இந்தப் பதிப்பைப் பற்றி மேலும் அறிய புதிது என்பதைக் காணவும் அல்லது முழுமையான தொழில்நுட்ப மேம்பாடுகளின் பட்டியலைக் காண இங்கு கிளிக் செய்யவும்.